16.3 C
New York
Wednesday, October 7, 2026

ரயில் பாதை சேதம் – ரயில்கள் தாமதம்.

பெர்னின் Wankdorf நிலையத்துக்கும்  Ostermundigenக்கும் இடையிலான ரயில் பாதையில் சேதம் ஏற்பட்டுள்ளதாக சுவிஸ் பெடரல் ரயில்வே அறிவித்துள்ளது.

இதனால்,பயணிகள் தாமதங்களை சந்திக்க வேண்டியிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

நேற்று  பிற்பகல் Wankdorf நிலையத்துக்கும்  Ostermundigenக்கும் இடையிலான ரயில் பாதையில் சேதம் ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனால் SBB அதன் செயல்பாட்டு பக்கத்தில் கட்டுப்பாடுகள் மற்றும் தாமதங்கள் பற்றி எச்சரித்தது.

எனினும், நேற்று இரவு 8 மணிக்குள் இடையூறு நீக்கப்பட்டது.

பெர்ன் மற்றும் துன் இடையிலான பாதையிலேயே சேதம் ஏற்பட்டது.

பல்வேறு இன்டர்சிட்டி மற்றும் யூரோசிட்டி ரயில்கள் இண்டர்லேக்கன், வலாய்ஸ் மற்றும் இத்தாலிக்கு இந்த பாதை வழியாகவே இயக்கப்படுகின்றன.

மூலம்- bluewin

Related Articles

Latest Articles