16.3 C
New York
Thursday, October 8, 2026

A1 நெடுஞ்சாலையில் தீக்கிரையான பேருந்து- பயணிகளின் கதி?

Lausanne மற்றும்  Yverdon இடையே A1 நெடுஞ்சாலையில் பேருந்து ஒன்று  தீப்பிடித்து எரிந்துள்ளது.

நேற்றுப் பிற்பகல் 2.45 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

- Advertisement -

Fribourg கன்டோனில் உள்ள Ependes  கிராமத்திற்கு அருகில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

உரிய நேரத்தில் பயணிகள் வெளியேறியதால் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

இதனால், Yverdon-Süd  நோக்கிய  A1 நெடுஞ்சாலை மூடப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்த தீவிபத்து போக்குவரத்து விபத்தினால் ஏற்படவில்லை என்றும், வாகனத்தில் ஏற்பட்ட பிரச்சினையால் ஏற்பட்டதாக Vaud  கன்டோனல் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மூலம் -bluewin

Related Articles

Latest Articles