Pfäffikon இல் இருந்து Rapperswil நோக்கி சென்று கொண்டிருந்த 3 கார்கள் ஒன்றின் மீது ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
47, 24 மற்றும் 53 வயதுகளை உடைய மூவர் அடுத்தடுத்து தங்கள் கார்களை ஒன்றன் பின் ஒன்றாக ஓட்டிக் கொண்டிருந்தனர்.
திங்கள்கிழமை காலை 6:30 மணியளவில், 53 வயதுடைய நபரில் கார் 24 வயதுடைய நபரின் காரின் பின்பகுதியில் மோதியது.
அந்த விபத்தினால், 24 வயதுடையவரின் கார், அவருக்கு முன்னால் ஓட்டிச் சென்ற 47 வயதுடையவரின் காரின் பின்பகுதியில் மோதியது.
இதில் சம்பந்தப்பட்ட 3 பேருக்கும் காயம் ஏற்பட்டது.
24 வயதான இளைஞன் அம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
மற்றவர்கள் தாங்களாகவே மருத்துவ சிகிச்சையை நாடியுள்ளனர்.
மூலம்- 20min

