24.3 C
New York
Thursday, August 20, 2026

வெடிப்பை அடுத்து இளம்பெண்ணின் கார் தீக்கிரை.

இளம் பெண் ஒருவர் ஓட்டிச் சென்ற கார் திடீரென வெடிப்பு சத்தத்தை அடுத்து பற்றியெரிந்துள்ளது.

A7 நெடுஞ்சாலையில் திங்கட்கிழமை மாலை சுமார் 5:40 மணியளவில் 23 வயதான பெண் ஒருவர் சூரிச் நோக்கி தனது காரை ஓட்டிச் சென்றார்.

அந்த பெண் Kemmental  அருகே பலத்த வெடிப்பு சத்தம் கேட்டு அவசர பாதைக்கு காரை செலுத்தினார்.

சிறிது நேரத்தில் இயந்திரப் பெட்டியில் தீப்பிடித்தது.

குரூஸ்லிங்கன் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

எனினும் கார் முற்றாக தீக்கிரையாகியுள்ளது.

பல ஆயிரம் சுவிஸ் பிராங்குகள் சேதம் ஏற்பட்டது. தொழில்நுட்பக் கோளாறினால் இது ஏற்பட்டதாக என Thurgau பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

மூலம்-20min

Related Articles

Latest Articles