25.6 C
New York
Saturday, June 20, 2026

பேருந்து மோதி ஒருவர் பலி- 4 பேர் காயம்.

Basel இல் உள்ள Baden ரயில் நிலையத்துக்கு அருகே இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று மாலை 4.15 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பேருந்து ஒன்று Badischer Bahnhof நிறுத்தத்தில் இருந்து Kleinhüningen புறப்பட்டுச் சென்ற போது, Rosentalstrasse சந்திப்பு அருகே சமிக்ஞைக்காக நிறுத்தப்பட்டிருந்த மினிபஸ் மற்றும் பாதசாரி மீது மோதியுள்ளது.

இதன்போது பல மீற்றர் தூரத்திற்கு பாதசாரி இழுத்துச் செல்லப்பட்டு அந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

அவரது விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.இந்தச் சம்பவத்தில் மேலும் 4 பேர் காயம் அடைந்துள்ளனர்.

அந்த வீதி மூடப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

மூலம்- 20min

Related Articles

Latest Articles