ஜிஹாத் பயணத்திற்காக திட்டமிட்ட 21 வயது சுவிஸ் நாட்டவர் மீது சுவிட்சர்லாந்து சட்டமா அதிபர் அலுவலகம் பெடரல் குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவர் தடைசெய்யப்பட்ட பயங்கரவாதக் குழுவான இஸ்லாமிய அரசு (IS) ஐ ஆதரித்ததாகக் கூறப்படுகிறது.
அவர் சோமாலியாவிற்குச் சென்று அங்கு ஐஎஸ்ஸில் சேர திட்டமிட்டிருந்தார் என்று சுவிட்சர்லாந்து சட்டமா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்த இளைஞன் பல்வேறு நபர்களுக்கு ஐஎஸ் பிரச்சாரப் பொருட்களை அனுப்பியதாகவும், வன்முறையின் சித்தரிப்புகளை வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது.
மூலம்- swissinfo

