Märstetten இல் ரயில் மோதி இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
Feldhof மற்றும் Frauenfelderstrasse இடையிலான பகுதியில் இந்தச் சம்பவம் திங்கட்கிழமை அதிகாலை 1 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இந்தச் சம்பவத்தில் 27 வயது மதிக்கத்தக்க இளைஞன் உயிரிழந்துள்ளார்.
ரயில் தண்டவாளத்தில் காணப்பட்ட அவரது சடலத்தை Thurgau பொலிசார் மீட்டுள்ளனர்.
குறித்த இளைஞன் இன்னமும் அடையாளம் காணப்படவில்லை.
மூலம்- swissinfo

