20.5 C
New York
Monday, June 22, 2026

நைஜரில்  சுவிஸ் பெண் கடத்தல்.

நைஜரில்  சுவிஸ் பிரஜை ஒருவர் கடத்தப்பட்டுள்ளதாக சுவிஸ் வெளியுறவு அமைச்சு நேற்று தெரிவித்துள்ளது.

இதுபற்றி தலைநகர் நியாமியில் உள்ள சுவிஸ் பிரதிநிதித்திகள், உள்ளூர் அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தெளிவுபடுத்தல்கள் நடந்து வருகின்றன” என்று வெளியுறவு அமைச்சர் இக்னாசியோ காசிஸின் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

தற்போதைக்கு கூடுதல் விபரங்கள் வெளியிடப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, ஞாயிற்றுக்கிழமை மாலை அகடெஸில் உள்ள வீட்டிலிருந்து சுவிஸ் குடியுரிமை பெற்ற வெளிநாட்டுப் பெண் கடத்தப்பட்டதை அகடெஸ் பிராந்தியத்தின் ஆளுநர் பிரிகேடியர் ஜெனரல் இப்ரா பவுலமா இசா,  உறுதிப்படுத்தியுள்ளார்.

கடத்தப்பட்ட சுவிஸ் பெண் வடக்கு நைஜரின் மிகப்பெரிய நகரமான அகடெஸில் பல ஆண்டுகளாக வசித்து வந்தார்.

அல்ஜீரியாவில் சிறிது காலம் கழித்து அவர் அங்கு குடிபெயர்ந்தார், அங்கு அவர் சுற்றுலாத்துறையில் பணியாற்றினார்.

லெபனானில் பிறந்து நைஜீரியரை மணந்த சுவிஸ் பெண்  கைவினைஞர்களை ஆதரிப்பதற்காக அகடெஸில் ஒரு சங்கத்தை அமைத்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதம், அகடெஸில் ஆயுதமேந்திய நபர்களால் ஒரு ஒஸ்திரியப் பெண் கடத்தப்பட்டார். 73 வயதான அவர் 28 ஆண்டுகளாக அந்தப் பகுதியில் வசித்து வந்தார்.

மூலம்- swissinfo

Related Articles

Latest Articles