Aargau,கன்டோனில் உள்ள Buchs இல் எரித்திரியர்களின் திருமண நிகழ்வு ஒன்றில் மோதல்கள் இடம்பெற்றுள்ளன.
சனிக்கிழமை இடம்பெற்ற திருமண நிகழ்வில் இரவு 11 மணியளவில் திடீரென மோதல்கள் இடம்பெற்றுள்ளன.
இந்தச் சம்பவத்தில்,பலர் காயம் அடைந்துள்ளனர்.
ஒருவரது கையில் வெட்டுக் காயம் ஏற்பட்டுள்ளது. இன்னொருவருக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்தச் சம்பவத்தை அடுத்து 3 பேரைக் கைது செய்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மூலம்- 20min