21.5 C
New York
Sunday, August 23, 2026

தெரு விழா கூட்டத்திற்குள் புகுந்த கார்- 11 பேர் பலி.

கனடாவின் வான்கூவர் நகரில் தெரு விழா கூட்டத்துக்குள் காரை ஓட்டிச் சென்ற நடத்தப்பட்ட தாக்குதலில் 11 பேர் உயிரிழந்தனர் என்று வான்கூவர் பொலிஸ் உறுதிப்படுத்தியுள்ளது.

நேற்றுமுன்தினம் இரவு 8.15 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

பிலிப்பைன்ஸ் நாட்டவர்கள் ஆண்டு தோறும் நடத்தும் லாபு லாபு என்படும் இந்த தெருவிழாவை நடத்தி வருகின்றனர்.

இந்த தெருவிழா கூட்டத்திற்குள் காரைச் செலுத்தி நடத்தப்பட்ட தாக்குதலில் 11 பேர் உயிரிழந்துள்ள அதேவேளை, மேலும் டசின்கணக்கானோர் காயம் அடைந்துள்ளனர்.

காயம் அடைந்தவர்களில் பலர் ஆபத்தான நிலையில் இருப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்று அஞ்சப்படுகிறது.

உயிரிழந்தவர்களில்  5 வயதுக்கும்  65 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலை நடத்திய 30 வயதுடைய கார் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் மனநிலைக் குறைபாடு உள்ளவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தீவிரவாத செயற்பாடு இல்லை என்று கனடிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Latest Articles