தீவிர சீர்திருத்தங்கள் மூலம் சுவிஸ் கத்தோலிக்க திருச்சபை, உறுப்பினர்களைப் பிரிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று சுவிஸ் ஆயர் மன்றத்தின் தலைவரும் Lausanne, Geneva மற்றும் Fribourg ஆயருமான சார்ள்ஸ் மோரோட் தெரிவித்துள்ளார்.
திருத்தந்தை பிரான்சிஸின் மரணத்தைத் தொடர்ந்து, கத்தோலிக்க திருச்சபையின் எதிர்கால போக்கு குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.
இந்த நிலையில், அதிகப்படியான சீர்திருத்தங்கள் சுவிட்சர்லாந்தில் உள்ள கத்தோலிக்க திருச்சபை உறுப்பினர்களை இன்னும் பிளவுபடுத்தும் என்று மோரேரோட் கூறியுள்ளார்.
“இருப்பினும், நாங்கள் எப்போதும் சிறிய படிகளில் சீர்திருத்தங்களைச் செய்கிறோம்.
சீர்திருத்தங்களைப் பொறுத்தவரை, சுவிட்சர்லாந்தில் உள்ள திருச்சபையை தனிமைப்படுத்தி பார்க்க முடியாது.
சுவிட்சர்லாந்தில், பாரம்பரியவாதிகளுக்கும் முற்போக்குவாதிகளுக்கும் இடையே பெரும் பிளவு உள்ளது. என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
மூலம்- swissinfo