21.5 C
New York
Sunday, August 23, 2026

விமானங்களில் விற்பனையை நிறுத்துகிறது லுஃப்தான்சா.

வாசனை திரவியங்கள், சிகரெட்டுகள், சன்கிளாஸ்கள் போன்றவற்றை, இனி நீண்ட தூர விமானங்களில் விற்கப் போவதில்லை என ஜெர்மன் விமான நிறுவனமான லுஃப்தான்சா அறிவித்துள்ளது.

எனினும், லுஃப்தான்சாவின் துணை நிறுவனமான சுவிஸ், தற்போதைக்கு இந்தப் பொருட்களை விற்பனை செய்வதில் உறுதியாக உள்ளது.

பொருளாதார காரணங்களுக்காக லுஃப்தான்சா விமானங்களில் இந்த விற்பனையை ரத்து செய்கிறது என்று, அந்த நிறுவனத்தின்  பேச்சாளர் ஒருவர் உறுதிப்படுத்தினார்.

அதிக கொள்வனவுச் செலவும், தேவை குறைந்துள்ளதுமே இதற்குக் காரணம்.

இந்த முடிவு வரும் செப்டம்பர் முதல், லுஃப்தான்சா குழுமத்தின் அனைத்து வலைமைப்புகளுக்கும் பொருந்தும்.

எனினும் சுவிஸ் நிறுவனம் தொடர்ந்து விற்பனையில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்துள்ளது.

மூலம்- swissinfo

Related Articles

Latest Articles