திருடக் கூடிய இணைப்புகளை உள்ளடக்கிய ஒரு புதிய மோசடி குறித்து ஆர்காவ் கன்டோனல் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
மோசடி செய்பவர்கள், இணைப்பு வழியாக வாங்குபவர்கள் போல நடித்து Twint கணக்குகளை அணுகுகிறார்கள்.
பின்னர் அவர்கள் பெரிய தொகைகளை அபகரித்துக் கொண்டு தகவல்தொடர்புகளை துண்டிப்பார்கள்.
ricardo.ch மற்றும் tutti.ch போன்ற தளங்களிலும், பேஸ்புக் மார்க்கட் பிளேஸ் மூலமும் விற்பனையில் ஈடுபடுபவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விற்பனை தள சட்டிங்கில் தொடர்பில் இருங்கள்.
ட்விண்ட் செயலிக்கு வெளியே ஒருபோதும் தகவல்களை உள்ளிட வேண்டாம்.
எந்த வித்தியாசமான இணைப்புகளையும் கிளிக் செய்ய வேண்டாம்.
சந்தேகத்திற்கிடமான QR குறியீடுகளை ஸ்கான் செய்ய வேண்டாம்.
வாங்குபவர் கூரியர் சேவையைப் பயன்படுத்த விரும்பினால் சந்தேகப்படுங்கள்.
சந்தேகம் இருந்தால், தகவல்தொடர்புகளை நிறுத்திவிட்டு, சாத்தியமான விற்பனையிலிருந்து விலகி இருப்பது நல்லது.
மோசடிக்கு ஆளான எவரும் காவல்துறையில் புகார் அளித்து, சம்பவத்தை வங்கி மற்றும் விற்பனை தளத்திற்கு தெரிவிக்க வேண்டும். என்றும் ஆர்காவ் கன்டோனல் காவல்துறை அறிவுறுத்துகிறது.
மூலம்- 20min.