Riehen இல் corner of Äussere Baselstrasse மற்றும் Bäumlihofstrasse இல் நேற்று முன்தினம் காலை 8 மணியளவில், பெரும் எண்ணிக்கையான பொலிசார் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
ஆயுதம் ஏந்திய பொலிசார் சுற்றிவளைத்து வீடு ஒன்றில் இருந்த ஆணைக் கைது செய்து கொண்டு சென்றனர்.
வீட்டு வன்முறையை அடுத்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
குறித்த வீட்டில் தம்பதியினர் வசித்து வந்தனர் என்றும், ஆண் கைது செய்யப்பட்ட பின்னர், பெண் அங்கிருந்து பொலிசாரின் உதவியுடன் வெளியேறியதாக அருகில் வசிப்பவர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த ஆண் துப்பாக்கியை வைத்து அச்சுறுத்தியதாக, கூறப்பட்டாலும், பொலிசார் உறுதிப்படுத்தவில்லை.
மூலம்- 20min.