Bulle இல் உள்ள H189 பைபாஸ் வீயில், மோன்ட்காலியா சுரங்கப்பாதையில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில், இருவர் காயம் அடைந்தனர்.
சனிக்கிழமை, இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், புல்லில் இருந்து ரியாஸ் நோக்கி பயணித்த 29 வயது ஓட்டுநரின் வாகனமும், இடதுபுறமாக சாலையை விட்டு விலகி, வழக்கமாக எதிர் திசையில் பயணித்த 63 வயது பெண்ணின் வாகனமுமே நேருக்கு நேர் மோதியுள்ளதாக ப்ரிபோர்க் கன்டோனல் காவல்துறை தெரிவித்துள்ளது.
காயமடைந்த இரண்டு ஓட்டுநர்களும் மீட்கப்பட்டு அம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இந்த விபத்தின் விளைவாக சுரங்கப்பாதை சுமார் ஒரு மணி நேரம் மூடப்பட்டது.
மூலம்- 20min

