Bad Zurzach இல் உள்ள ஒரு தோட்டக்கலை நிறுவனத்திற்குச் சொந்தமான கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதுபற்றி சனிக்கிழமை இரவு 1:30 மணிக்குப் பின்னர், அவசர அழைப்பு மையத்திற்கு தகவல் கிடைத்ததாக ஆர்காவ் கன்டோனல் காவல்துறை தெரிவித்துள்ளது.
தீயணைப்புத் துறை உடனடியாகச் செயல்பட்டு தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தது.
அதிகாலை வரை தீயை அணைக்கும் முயற்சிகள் தொடர்ந்தன.
தீ விபத்து ஏற்பட்டபோது கட்டிடத்தில் யாரும் இல்லை. யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இருப்பினும், பாதிக்கப்பட்ட கட்டிடம் தீயினால் கிட்டத்தட்ட முற்றிலுமாக அழிக்கப்பட்டது.
தீ விபத்துக்கான காரணம் குறித்து ஆர்காவ் கன்டோனல் காவல்துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது.
மூலம்- 20min

