3.2 C
New York
Sunday, March 29, 2026

ஒரே நாளில் ஐந்து இளையோர் அவலச் சாவு.

வடக்கில் நேற்று ஒரே நாளில் ஐந்து இளையோர் அவலச் சாவினைச் சந்தித்துள்ளனர்.

முல்லைத்தீவு, உடுப்புக்குளம் பகுதியில் உள்ள குளத்தில் நேற்றுப் பிற்பகல் தாமரைப்பூ பறிக்கச் சென்ற இருவர்  தோணி கவிழ்ந்துள்ள உயிரிழந்துள்ளனர்.

அளம்பில் தெற்கில் வசிக்கும் 10 வயதுடைய சி.பிரணவன், 25 வயதுடைய இ.நிஷாந்தன் ஆகியோரே இந்தச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.

அதேவேளை, முல்லைத்தீவு, குமுழமுனை, கொட்டுக்கிணற்றுப் பிள்ளையார் ஆலயக்  கேணியில் நேற்று செல்பி எடுக்கச் சென்ற பாடசாலை மாணவிகள் மூவரில் இருவர் கேணிக்குள் தவறி வீழ்ந்தனர்.

அவர்கள் ஆபத்தான நிலையில் குமுழமுனை இளைஞர்களால் மீட்கப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

பூதன்வயல், மாமூலை பகுதியில் வசிக்கும், முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியில் தரம் 10 இல் கல்வி கற்கும் மாணவிகளே உயிரிழந்துள்ளனர்.

அதேவேளை, அண்மையில் ஓமந்தையில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த, யாழ்ப்பாண இந்தியத் துணைத் தூதரகத்தில் கலாசார உத்தியோகத்தராகப் பணிபுரிந்த சச்சிதானந்தக் குருக்கள் பிரபாகரனின், மகனான 25 வயதுடைய அக்ஷய், மருத்துவ சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்தில் அவரும் அவரது தாயாரும், பேரனும் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்தனர்.

Related Articles

Latest Articles