ஜெனீவா பல்கலைக்கழகம் இஸ்ரேலின் ஜெருசலேம் மற்றும் டெல் அவிவ் பல்கலைக்கழகங்களுடனான ஒத்துழைப்பைக் குறைத்து வருகிறது.
இஸ்ரேலுடனான உறவுகளை எதிர்த்து மாணவர்கள் நடத்திய உள்ளிருப்பு போராட்டங்களுக்குப் பின்னர் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஜெருசலேம் ஹெப்ரு பல்கலைக்கழகத்துடனான மூலோபாய கூட்டாண்மையை சுவிஸ் பல்கலைக்கழகம் முடிவுக்குக் கொண்டு வருகிறது.
இந்த கூட்டாண்மையில், எடுத்துக்காட்டாக, நோய் ஆராய்ச்சி மற்றும் மருந்து மேம்பாடு குறித்த கூட்டு நிதியுதவி திட்டம், ஹெப்ரு மற்றும் அரபு இடப் பெயர்களை ஆராயும் திட்டம் ஆகியவை அடங்கும்.
ஜெனீவா பல்கலைக்கழகம் டெல் அவிவ் ஹெப்ரு பல்கலைக்கழகத்துடன் மாணவர் பரிமாற்றத் திட்டத்தையும் நீடிக்க விரும்பவில்லை. இது 2026 இல் காலாவதியாகிறது.
இருப்பினும், ஜெனீவா மற்றும் இஸ்ரேலைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களிடையே தனிப்பட்ட ஒத்துழைப்புகள் இன்னும் சாத்தியமாகும் என்று பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
சுவிட்சர்லாந்தில் ஜெனீவா பல்கலைக்கழகம் மட்டும் தனது நிலைப்பாட்டில் தனித்து நிற்கிறது.
மனித உரிமைகள் மற்றும் சர்வதேச சட்ட மீறல்களைக் கண்டிப்பதாக சுவிஸ் பெடரல் இன்ஸ்டிடியூட் ஒப் டெக்னொலஜி லௌசேன் (EPFL) கூறிய போதும், கல்வி புறக்கணிப்பை ஆதரிக்கவில்லை.
பாசல் பல்கலைக்கழகத்திலும், ஆராய்ச்சி ஒத்துழைப்புகள் மற்றும் மாணவர் பரிமாற்றங்களை நிறுத்துவது தற்போது ஒரு பிரச்சினையாக இல்லை.
மூலம்- swissinfo