இத்தாலிய ரிவியராவில் உள்ள Celle Ligure வில், கடலில் மிதந்த சுவிஸ் பிரஜை ஒருவரின் சடலம் நேற்று முன்தினம் மீட்கப்பட்டுள்ளது.
இறந்தவர் ரோமில் பதிவு செய்த 42 வயதான சுவிஸ் பிரஜையாவார்.
அவர் சுவிஸ் பசுமைக் கட்சியின் தலைவர் லிசா மஸ்ஸோனின் சகோதரர் என்று, கட்சி உறுதிப்படுத்தியுள்ளது.
Bouffou கடற்கரைப் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
கடலில் ஆபத்தில் சிக்கியிருந்த ஒருவரை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட போதும், அவரை சடலமாகவே மீட்க முடிந்த தாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிய விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.
இறந்தவர் பிரெஞ்சு மொழி பேசும் சுவிட்சர்லாந்தில் ஒரு பழமைவாத வர்ணனையாளராவார்.
அவர் பல்வேறு இணையத்தளங்களுக்கு தொடர்ந்து சர்ச்சைக்குரிய கட்டுரைகளை எழுதி வந்தார்.
அவரது அரசியல் நிலைப்பாடு காரணமாக, பசுமைக் கட்சித் தலைவர் Mazzone அண்மைய ஆண்டுகளில் தனது குடும்பத்திலிருந்து தன்னைத் தூர விலக்கிக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்- bluewin