ஜெர்மனியின் Munich நகரில் வீதியால் சென்றவர்களை கத்தியால் தாக்கிய பெண் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
30 வயதுடைய பல்கேரிய நாட்டுப் பெண் ஒருவரே இந்த தாக்குதலில் ஈடுபட்டுள்ளார்.
முதலில் அவர் 56 வயதுடைய ஆண் ஒருவரையும், பின்னர் 25 வயதுடைய பெண் ஒருவரையும் கத்தியால் தாக்கி காயப்படுத்தினார்.
இதையடுத்து அவரை தேடிப்பிடிக்கும் நடவடிக்கையில் பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டன.
அவரை சரணடைய மறுத்த நிலையில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
அவர் அந்த இடத்திலேயே மரணமானார் என்று கூறப்படுகிறது. அவர ஏன் இந்த தாக்குதலை நடத்தினார் என்று இன்னமும் கண்டறியப்படவில்லை.
மூலம் – 20min.