0.3 C
New York
Thursday, February 12, 2026

ஒரே இடத்தில் அடுத்தடுத்து இரண்டு விபத்துகள்.

ஆர்காவ் கன்டோனில் வில்மெர்கனில் ஒரே இடத்தில் அடுத்தடுத்து இரண்டு விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன.

நேற்றுக்காலை 11:00 மணியளவில், 45 வயதான சுவிஸ் பெண் ஒருவர் தனது டெஸ்லா காரை ஓட்டிச் சென்ற போது, மற்றொரு வாகனத்துடன் மோதி விபத்து ஏற்பட்டது.

இதில், இரு ஓட்டுநர்களுக்கும் சிறு காயங்கள் ஏற்பட்டன. ஒரு காரில் இருந்த இரண்டு குழந்தைகள் காயம் இன்றி தப்பியுள்ளன.

டெஸ்லா கார் ஓட்டுநர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இரண்டு வாகனங்களும் சேதமடைந்தன.

சிறிது நேரத்திற்குப் பின்னர், மதியம் 12:30 மணியளவில், இரண்டாவது விபத்து அதே இடத்தில் இடம்பெற்றுள்ளது.

டின்டிகோனுக்குச் செல்லும் வழியில் 32 வயது பல்கேரிய நபர், டிரெய்லரை வலது பக்கமாகத் திருப்பிய போது,  பக்கவாட்டில் சாய்ந்தது.

இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

ஆனால் மீட்பு நடவடிக்கைக்காக வீதி பல மணி நேரம் மூடப்பட்டது.

மூலம்- 20min

Related Articles

Latest Articles