18.8 C
New York
Tuesday, September 9, 2025

சிவப்பு விளக்கை மீறி ஸ்கூட்டரில் சென்ற சிறுவன் படுகாயம்.

வின்டர்தூரில் நேற்றுமுன்தினம் இரசு இடம்பெற்ற விபத்தில் 7 வயதுச் சிறுவன் காயம் அடைந்துள்ளார்.

50 வயது பெண் ஒருவர் ஞாயிறு இரவு 9:30 மணியளவில், ஃப்ரௌன்ஃபெல்டர்ஸ்ட்ராஸில் நகர மையத்தை நோக்கி காலில் சென்று கொண்டிருந்த  போது, ரூடிவெக் சந்தியில்,  சிவப்பு விளக்கு  மீறி  தனது ஸ்கூட்டரை ஓட்டிச் சென்ற 7 வயது சிறுவன் மீது மோதினார்.

இந்தச் சம்பவத்தில் சிறுவன் பலத்த காயம் அடைந்த நிலையில்,  அம்புலன்ஸ் சேவை மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

அதேவேளை, ஞாயிற்றுக்கிழமை, வின்டர்தூரில் உள்ள பாம்ஸ்ட்ராஸில் மற்றொரு விபத்து ஏற்பட்டது.

60 வயது பெண் ஒருவர் தனது காரை தரிப்பிடத்திலிருந்து வெளியே ஓட்டிச் சென்று கொண்டிருந்த போது, 56 வயது மொபட் ஓட்டுநர் மீது மோதினார்.

இந்த விபத்தில் 56 வயதுடையவரின் தலையில் காயம் ஏற்பட்டது.

மூலம்- 20min.

Related Articles

Latest Articles