21.8 C
New York
Monday, September 8, 2025

ஓடிக் கொண்டிருந்த போது தீப்பற்றிய கார்- தப்பித்த தம்பதி.

ஓடிக் கொண்டிருந்த காரில் திடீரெனத் தீப்பற்றி எரிந்துள்ளது. அதில் பயணம் செய்த தம்பதியினர் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை குஸ்நாச்சிலிருந்து கோல்டாவ் நோக்கிச் செல்லும் நெடுஞ்சாலையில் 54 வயதான ஜெர்மன் பெண் ஓட்டுநர் ஒருவர் வாகனம் ஓட்டிச் சென்று கொண்டிருந்தார்.

காலை 10:10 மணியளவில், தனது காரில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதைக் கவனித்து,  அவசரப் பாதையில் வாகனத்தை நிறுத்தினார்.

உடனடியாக இயந்திரத்தில்  புகை தோன்றியது.

அந்தப் பெண்ணும் அவரது 64 வயது கணவரும் கார் முழுமையாக தீயில் எரிவதற்கு முன்னரே,  வெளியேறியதால் உயிர் தப்பினர்.

தீயை அணைக்க குஸ்நாச் தீயணைப்புத் துறையினர் வரவழைக்கப்பட்டனர்.

முன்னெச்சரிக்கையாக அவசர மருத்துவ சேவைகளும் அழைக்கப்பட்டன. யாருக்கும் காயம் ஏற்படவில்லை. கார் முற்றிலும் சேதமடைந்தது.

மூலம்- 20min.

Related Articles

Latest Articles