19.7 C
New York
Monday, September 8, 2025

மலையேற்ற வீரரை சுற்றிவளைத்து புரட்டியெடுத்த பசுக்கூட்டம்.

ஜூரா கன்டோனில், மாடுகளின் கூட்டத்தால்  தாக்கப்பட்ட  மலையேற்ற வீரர் படுகாயமடைந்துள்ளார்.

அந்த நபர் தனது நாயுடன் சௌபே மற்றும் சைக்னெலிஜியர் இடையே நடைபயணம் மேற்கொண்டிருந்த போது கடந்த வெள்ளிக்கிழமை இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

அவருக்கு  இரண்டு விலா எலும்புகள் உள்ளிட்ட எலும்பு முறிவு காயங்களும்,  மூளையதிர்ச்சி மற்றும் ஏராளமான காயங்களும் ஏற்பட்டுள்ளன.

மாடுகள் அவரைத் தள்ளி மிதித்து மூர்க்கமாகத் தாக்கியுள்ளன.

அவருடன் சென்ற நாய்  மாடுகளை பயமுறுத்தியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

நடைபயணம் மேற்கொண்டபோது, அந்த நபர் திடீரென சுமார் பத்து மாடுகள் கொண்ட ஒரு கூட்டத்தை சந்தித்தார்.

பசுக்கள் முதலில் நாயைத் தாக்கியுள்ளன. பின்னர் மலையேற்ற வீரரையும் அவரது நாயையும் சுற்றி வளைத்து,  தரையில் வீசி, உதைத்ததாகக் கூறப்படுகிறது.

அந்த நபரின் அலறல் சத்தத்தை கேட்ட அருகிலுள்ள ஒரு தம்பதியினர் அவருக்கு உதவி செய்ய விரைந்து வந்ததுடன், அவசர சேவைகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

மூலம்- 20min.

Related Articles

Latest Articles