18.2 C
New York
Sunday, September 7, 2025

88 வயதில் தமிழில் சித்திபெற்ற சிங்களப் பெண்.

பிரபுத்தகம, அங்குருவதோட்டையைச் சேர்ந்த 88 வயதான ஓய்வுபெற்ற ஆசிரியை கே. மிசலின் நோனா அண்மையில் வெளியான க.பொ.த சாதாரண தர பரீட்சையில்,  தமிழ் மொழியில் தோற்றி, சி தர சித்தியை பெற்றுள்ளார்.

நான் சிறந்த பெறுபேறு ஒன்றை எதிர்பார்த்தேன் – குறைந்தபட்சம் பி சித்தி கிடைக்கும் என்று மிகவும் நம்பிக்கையுடன் இருந்தேன்.

இப்போது, நான் மீண்டும் தமிழ் மொழி பரீட்சையில்  ‘ஏ’ சித்தியை பெறுவதற்கு பெறத் தயாராகி வருகிறேன். அதுதான் எனது திட்டம்.”என்று தெரிவித்துள்ளார்.

1937 இல் பிறந்த மிசலின் நோனா தனது மூத்த மகள் மற்றும் பேத்தியுடன் வசிக்கிறார்.

அவர் ஏழு குழந்தைகளின் தாய், அவர்கள் அனைவரும் இப்போது பெரியவர்கள்.

அவரது மகன்கள் ஆயுதப்படைகளில் பணியாற்றி இப்போது ஓய்வு பெற்றுள்ளனர்.

“எங்கள் சமூகத்தில், தமிழ் என்பது நமக்குத் தேவையான மொழி. நான் அதை இன்னும் ஆழமாகப் படிக்க விரும்பினேன்,” என்று அவர் கூறினார்.

நாள் ஆசிரியரிடம் கற்கவில்லை. தமிழ் புத்தகங்களைத் தேடிக் கண்டுபிடித்து நானே படித்தேன். என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Latest Articles