ரோமன்ஷோர்னில் உள்ள மிட்லிஸ்ஸெல்க்ஸ்ட்ராஸ்ஸில் பல வாகனங்கள் திடீரெனத் தீப்பற்றி எரிந்து நாசமாகியுள்ளன.
இன்று அதிகாலை 1:30 மணியளவில், வாகனங்கள் தீப்பிடித்து எரிவதாக கன்டோனல் அவசர அழைப்பு மையத்திற்கு தகவல் கிடைத்தது.
ரோமன்ஷோர்ன் தீயணைப்புத் துறை விரைவாகச் செயல்பட்டு தீயை அணைத்ததாக துர்காவ் கன்டோனல் பொலிசார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இருப்பினும், மூன்று வாகனங்கள் மற்றும் இரண்டு டிரெய்லர்கள் முற்றிலும் சேதம் அடைந்தன.
தீ விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய தீயணைப்பு புலனாய்வுத் துறை பணியைத் தொடங்கியுள்ளது.
மூலம்- 20min.