உஸ்வில்லில் உள்ள ஒரு ஒற்றைக் குடும்ப வீடு தீப்பிடித்து எரிந்துள்ளது.
இதுபற்றி இன்று அதிகாலை 12:45 மணிக்கு, கன்டோனல் அவசர அழைப்பு மையத்திற்கு தகவல் கிடைத்தது.
தீயணைப்புத் துறை, ஒரு அம்புலன்ஸ் மற்றும் காவல்துறை உடனடியாக விரைந்து சென்றதாக ஆர்காவ் கன்டோனல் காவல்துறை தெரிவித்துள்ளது.
அவசர உதவியாளர்கள் சென்ற நேரத்தில், கட்டடத்தின் பெரும்பகுதி ஏற்கனவே தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது.
உள்ளே யாரும் இருக்கவில்லை,அதனால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
தீயணைப்புத் துறை அதிகாலை 3:00 மணியளவில் தீயைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது.
தீயணைப்பு நடவடிக்கைகளின் போது அயலில் உள்ளவர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டியிருந்தது.
ஆர்காவ் கன்டோனல் காவல்துறை தீ விபத்துக்கான காரணத்தை விசாரிக்கத் தொடங்கியுள்ளது.
மூலம்- 20min,