2024ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம், Bülach இல் இரண்டு சமூகப் பணியாளர்களை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற, 20 வயது புகலிடக் கோரிக்கையாளர் ஒருவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அவர் மீது சுமத்தப்பட்ட கொலை முயற்சி,கடுமையான உடல் ரீதியான தீங்கு மற்றும் அச்சுறுத்தல் விடுத்தல் ஆகிய குற்றச்சாட்டுகளில் குற்றவாளி என புலாச் மாவட்ட நீதிமன்றத்தால் நிரூபிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து நேற்று அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன், பிரதிவாதி 10 ஆண்டுகள் நாட்டிலிருந்து வெளியேற்றப்படுவார் என்றும் நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
மூலம்- bluewin