23.5 C
New York
Thursday, September 11, 2025

பெட்ரோல் நிலையத்தில் கொள்ளையிட்டவர் சிக்கினார்.

Hendschiken இல் உள்ள பெட்ரோல் நிலைய கடையில் பணத்தைக் கொள்ளையடித்தவர் சில மணித்தியாலங்களுக்குள் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று பிற்பகல் 5 மணியளவில் இந்த கொள்ளை இடம்பெற்றது.

பணத்தைக் கொள்ளையடித்தவர் தப்பிச் சென்ற நிலையில் உடனடியாக பொலிஸ் ரோந்து அணிகள் உசார்படுத்தப்பட்டு தேடுதல்கள் நடத்தப்பட்டன.

கொள்ளையில் ஈடுபட்டவர் பற்றி வெளிப்படுத்தப்பட்ட அடையாளங்களின் அடிப்படையில் நடத்தப்பட்ட தேடுதலை அடுத்து. இரவு 8 மணியளவில் 43 வயதுடைய  சந்தேக நபர் Aargau  கன்டோனல் கைது செய்யப்பட்டுள்ளார்.

மூலம்- 20min.

Related Articles

Latest Articles