0.8 C
New York
Monday, December 29, 2025

முதியோர் இணையத்தைப் பயன்படுத்தும் வீதம் அதிகரிப்பு.

சுவிட்சர்லாந்தில், 14 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட கிட்டத்தட்ட அனைவருமே, இணையப் பாவனையில் உள்ளனர் என்று ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

குறிப்பாக இணையத்தைப் பயன்படுத்தும் வயதானவர்களின் வீதம், கடந்த மூன்று ஆண்டுகளில் கணிசமாக அதிகரித்துள்ளது.

2022 ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து 2024 ஆம் ஆண்டின் இறுதி வரை, இணையத்தைப் பயன்படுத்தும் ஓய்வூதியதாரர்களின் வீதம்,  4.3  இனால் அதிகரித்துள்ளது.

இந்த வயதினரில் 79.8% பேர் இப்போது இணையத்தைப் பயன்படுத்துகின்றனர் என்று விளம்பர ஊடக ஆராய்ச்சி நிறுவனமான WEMF தெரிவித்துள்ளது.

ஸ்மார்ட்போனை அனைத்து இணைய பயனர்களில் 94.7% பேர் பயன்படுத்துகின்றனர்.

ஓய்வு பெற்றவர்களில் கிட்டத்தட்ட 85% பேர் இன்று இணையத்தை அணுக தங்கள் ஸ்மார்ட்போனைப் பயன்படுத்துகின்றனர்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் இந்த எண்ணிக்கை 81% ஆக இருந்தது.

ஓய்வு பெற்றவர்களில், நிரந்தரமாக நிறுவப்பட்ட கணினிகளால் 56.8% பேர் இணையத்தை பயன்படுத்துகின்றனர்.

அதைத் தொடர்ந்து மடிகணினிகள் அல்லது நெட்புக்குகள் (56.6%) மற்றும் டப்லெட் பிசிக்கள் (44.7%) உள்ளன.

இருப்பினும், 20 முதல் 29 வயதுடைய இளைஞர்கள் ஸ்மார்ட்போன்களுக்கு ( 93%) பின்னர், மடிகணினிகளை  (66.2%) அதிகம்  விரும்புகிறார்கள்.

நிரந்தரமாக நிறுவப்பட்ட கணினிகள் இந்த வயதினரில் பாதி பயனர்களால் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன.

இதற்கிடையில், டப்லெட் பிசிக்கள் 40 முதல் 49 வயதுடையவர்களிடையே குறிப்பாக பிரபலமாக உள்ளன.

மூலம்- swissinfo

Related Articles

Latest Articles