சுவிஸ் ஜனாதிபதி கரின் கெல்லர்-சுட்டர் மற்றும் பொருளாதார அமைச்சர் கை பர்மெலின் ஆகியோர் நேற்று வொஷிங்டனுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
வரிகளைக் குறைப்பது தொடர்பாக,அமெரிக்க அதிகாரிகளுடன் பேச்சுக்களை நடத்தவே அவர்கள் இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.
பொருளாதார விவகாரங்களுக்கான செயலாளர், ஹெலீன் பட்லிகர் ஆர்டிடா மற்றும் சர்வதேச நிதி விடயங்களுக்கான செயலாளர் டேனிலா ஸ்டோஃபெல் உள்ளிட்ட ஒரு சிறிய குழுவும், அவர்களுடன், அமெரிக்கா சென்றுள்ளதாக மத்திய நிதி அமைச்சு அறிவித்துள்ளது.
“அமெரிக்காவின் கவலைகளை கணக்கில் எடுத்துக் கொண்டு, சுவிஸ் ஏற்றுமதிகளுக்கான கூடுதல் வரிகளைக் குறைப்பதற்காக அமெரிக்காவிற்கு மிகவும் கவர்ச்சிகரமான சலுகையை வழங்குவதே” இதன் நோக்கம்.
பொதுமக்களுக்கு ஏதேனும் பொருத்தமான முன்னேற்றங்கள் ஏற்பட்டவுடன் மத்திய அரசு விரைவில் அறிவிக்கும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
திங்கட்கிழமை நடந்த விசேட கூட்டத்தில், சுவிஸ் அரசாங்கம், வரிகள் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைகளைத் தொடந்து முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்திருந்தது.
மூலம்- 20min.

