லிம்மட்டல் சிறையில் கைதி ஒருவர் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
திங்கட்கிழமை காலை ஒரு கைதி அசைவற்றுக் கிடந்த நிலையில், உடனடி உயிர்ப்பிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும், பலனளிக்கவில்லை என்று கன்டோனல் நீதித்துறை அறிவித்துள்ளது.
76 வயதான அந்த நபர் இறந்துவிட்டதாக மருத்துவர் அறிவித்தார்.
கன்டோனல் காவல்துறை மற்றும் அரசு வழக்கறிஞர் அலுவலகத்தின் விசாரணைகளில் இதுவரை மூன்றாம் தரப்பினரின் ஈடுபாட்டிற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை.
மூலம்- 20min.

