வலைஸ் கன்டோனில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதிக் கொண்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கிரேட் சென் பெர்னார்ட் பாஸ் வீதியில் போர்க்-சென்-பியர் நோக்கிச் சென்று கொண்டிருந்த இரண்டு மோட்டார் சைக்கிள்களும் நேற்று இரவு 8 மணிக்குப் பிறகு, சுரங்கப்பாதையின் முன் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின.
இதன்போது, தடுப்புச் சுவரில் மோதி இரண்டு மோட்டார் சைக்கிள்களும் தீப்பிடித்தன.
விபத்து நடந்த இடத்திலேயே ஒருவர் இறந்தார். அவர் இன்னமும் அடையாளம் காணப்படவில்லை.
இரண்டாவது மோட்டார் சைக்கிள் ஓட்டுநரான 51 வயதான சுவிஸ் நாட்டவர், பலத்த காயங்களுடன் ஏர் கிளேசியர்ஸ் ஹெலிகொப்டர் மூலம் சியோனில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
மூலம்- bluewin