26.6 C
New York
Saturday, August 9, 2025

சுவிசில் இலங்கையர் வெட்டிக்கொலை- இத்தாலியர் காயங்களுடன் கைது.

சென் காலனில் இன்று அதிகாலை இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தில்,  இலங்கையைச் சேர்ந்த 54 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார். 40 வயது இத்தாலிய நபர் ஒருவர் பலத்த காயமடைந்த நிலையில்,  கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று அதிகாலை 12:45 மணியளவில், இந்தச் சம்பவம், இடம்பெற்றுள்ளது.

மோதல் நடப்பதாக சென் காலன் பொலிஸ் அவசர அழைப்பு மற்றும் செயல்பாட்டுக் கட்டுப்பாட்டு மையத்திற்கு மூன்றாம் தரப்பினரிடமிருந்து தகவல்கள் கிடைத்தன.

இதையடுத்து,  சிறிது நேரத்தில் காவல்துறை ரோந்துப் படையினர் சம்பவ இடத்திற்கு சென்ற போது, வெட்டுக்களுக்குள்ளாகி, படுகாயமடைந்த இரண்டு பேரைக் கண்டனர்.

அவர்களில் இலங்கையைச் சேர்ந்த 54 வயது நபர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

40 வயது இத்தாலிய நபர் பலத்த காயங்களுடன் அம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இருவரும் சென் காலன் கன்டோனில் வசிக்கின்றனர் என்றும் தெரியவந்துள்ளது.

மூலம்- bluewin

Related Articles

Latest Articles