15.3 C
New York
Thursday, October 15, 2026

சென் காலனில் கார் மோதி குழந்தை பலி.

சென் காலனில் உள்ள ஸ்டால்ஸ்ட்ராஸ்ஸில் திங்கட்கிழமை மாலை, இடம்பெற்ற விபத்தில்,  ஒரு குழந்தை உயிரிழந்தது.

கார்  மோதியதில் நான்கு வயது சிறுவன், படுகாயம் அடைந்து, குழந்தைகள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான்.

- Advertisement -

சுமார் இரண்டு மணி நேரத்திற்குப் பின்னர் அவன் அங்கு பலத்த காயங்களால் மரணமானான்.

44 வயதான ஜெர்மன் குடிமகன் ஒருவர் ஸ்டால்ஸ்ட்ராஸில் ஜூர்செர்ஸ்ட்ராஸ் நோக்கி நேற்று இரவு 7 மணியளவில்,  ஓட்டிச் சென்று கொண்டிருந்த போது,   குழந்தை மீது மோதியுள்ளார்.

மூலம்- 20min.

Related Articles

Latest Articles