பாஸல்-லேண்ட்ஷாஃப்ட் கன்டோனில், சிசாச்சில் 98 வயது முதியவர் ஒருவர் காரை ஓட்டிச் சென்று, சில்லறை விற்பனைக் கடையின் முன் கண்ணாடியில் மோதினார்.
திங்கட்கிழமை, மாலை 6 மணியளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
98 வயதான ஓட்டுநர் கெல்டர்கிண்டனில் இருந்து சிசாச் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
ஹாப்ட்ஸ்ட்ராஸ் மற்றும் கெல்டர்கிண்டர்ஸ்ட்ராஸ் சந்திப்பில் உள்ள ரவுண்டானாவில், அவர் தனது வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்தார்.
ரவுண்டானா வெளியேறும் இடத்தின் வலது புறத்தில் உள்ள புல்வெளி வளைவில் அவர் ஓட்டிச் சென்று பின்னர் வீதியின் குறுக்கே ஓட்டினார்.
இதன் விளைவாக, வாகனம் சிறிது மேலேறி நிறுத்தப்பட்டிருந்த காரில் மோதிய பின்னர், ஒரு கடையின் முன் கண்ணாடிகளை உடைத்துக் கொண்டு நின்றது.
இதையடுத்து, அவரது ஓட்டுநர் உரிமம் சம்பவ இடத்திலேயே பறிமுதல் செய்யப்பட்டது என்று காவல்துறை அறிக்கை கூறுகிறது.
மூலம்- 20min.