ஜெர்மனியை நோக்கிச் செல்லும் A2 மோட்டார் பாதையின் சில பகுதிகள் இந்த வார இறுதியில், முழுமையாக மூடப்படும்.
கட்டுமானப் பணிகளே, முழுமையாக மூடப்படுவதற்கான காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், மோட்டார் பாதையில் “நிரந்தர நெரிசல்” ஏற்படும் என்று அஸ்ட்ரா எச்சரித்துள்ளது.
ஜெர்மனியை நோக்கிச் செல்லும் A2 மோட்டார் பாதை, ஸ்வார்ஸ்வால்ட் பாலத்திற்கும் வைஸ் சந்திப்புக்கும் இடையில் – ஓகஸ்ட் 23 சனிக்கிழமை இரவு 11 மணி முதல் ஓகஸ்ட் 25 திங்கள் காலை 6 மணி வரை, முழுமையாக மூடப்படும்.
இந்த நேரத்தில் எதிர் திசையில் ஒரு பாதை மட்டுமே திறந்திருக்கும்.
திட்டமிடப்பட்ட பணிகள் வானிலை சார்ந்தது. மோசமான வானிலை ஏற்பட்டால், கட்டுமானப் பணிகள் ஒரு வாரம் ஒத்திவைக்கப்படும்.
மூலம்- 20min.