இரண்டு வாரங்களுக்கு, கிளாராஸ்ட்ராஸ் வழியாக எந்த டிராம் வண்டிகளும் ஓடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
தண்டவாளப் புதுப்பித்தல் காரணமாக, ஓகஸ்ட் 25 முதல் செப்டம்பர் 5,ஆம் திகதி வரை கிளாராஸ்ட்ராஸ் வழியாக எந்த டிராம்களும் இயக்கப்படாது.
டிராம் பாதை 6 வெட்ஸ்டீன்ப்ளாட்ஸ் வழியாக திருப்பி விடப்படும்.
டிராம் பாதை 14 ஓடாது, மேலும் டிராம் பாதை 15 பாடிஷர் பான்ஹோப்பில் திரும்பும்.
கூடுதலாக, டிராம் பாதை 21 எக்லிசி மற்றும் செயிண்ட் ஜோஹன் நிலையத்திற்கு இடையே நாள் முழுவதும் இயங்கும்.
தட அமைப்பின் மோசமான நிலை காரணமாக, புதுப்பித்தல் அவசரமாக தேவைப்படுவதாக கட்டுமான மற்றும் போக்குவரத்துத் துறை (BVD) ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மூலம்- 20min.