16.6 C
New York
Wednesday, September 10, 2025

சூரிச்சில் திருடப்பட்ட 18 இ-பைக்குகள் மீட்பு.

சூரிச்சில் இ-பைக் திருட்டுத் தொடர்பான விசாரணைகளில் இறங்கிய பொலிசார், திருடப்பட்ட 18 இ-பைக்குகளை கைப்பற்றியுள்ளனர்.

ஓகஸ்ட் மாத நடுப்பகுதியில் சூரிச்சின் ப்ஃபங்கனில் உள்ள பிரெய்ட்யேக்கர் பள்ளியில் இருந்து இரண்டு இ-பைக்குகள் திருடப்பட்டதை அடுத்து, சூரிச் கன்டோனல் பொலிசார் மூன்று பேரை கைது செய்தனர்.

இந்த விசாரணைகளில், அவர்கள் மொத்தம் 18 இ-பைக்குகளை திருடியதாகக் கூறப்படுகிறது.

புஃபங்கனில் இரண்டு இ-பைக்குகள் திருடப்பட்டதைத் தொடர்ந்து, சூரிச் கன்டோனல் பொலிசார் வெள்ளிக்கிழமை நடத்திய விசாரணையில், பைக்குகளை கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்ட ஒரு வாகனத்தின் உரிமையாளர் கண்டுபிடிக்கப்பட்டார்.

45 வயதான அந்த சுவிஸ் நபர் கைது செய்யப்பட்டார்.

வான், மற்ற இரண்டு சந்தேக நபர்கள் மற்றும் திருடப்பட்ட இரண்டு இ-பைக்குகள் பின்னர் சூரிச்சின் ஹெட்லிங்கனில் கண்டுபிடிக்கப்பட்டன.

மொண்டினீக்ரோ மற்றும் பொஸ்னியா மற்றும் ஹெர்சகோவினாவைச் சேர்ந்த 53 மற்றும் 24 வயதுடைய இரண்டு பேரை  பொலிசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மூலம்- 20min.

Related Articles

Latest Articles