ஆஸ்ட்ராஸ்/ரோமர்வெக் சந்திப்பிற்கு அருகில் எம்ப்ராச் பெடரல் புகலிட மையத்தில் நேற்றுமுன்தினம் இரவு 8 மணியளவில் இடம்பெற்ற மோதலில் 4 பேர் காயம் அடைந்தனர்.
இந்த மோதலில் எரித்திரியா மற்றும் மொராக்கோவைச் சேர்ந்த 24 முதல் 29 வயதுடைய நான்கு ஆண்களே காயமடைந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மீட்பு ஹெலிகொப்டர் மற்றும் அம்புலன்ஸ்கள் மூலம் அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டியிருந்தது.
புகலிடக் கோரிக்கையாளர்கள் இடையே ஏன் வாக்குவாதம் ஏற்பட்டது, அவர்கள் எவ்வாறு காயமடைந்தனர் என்பது குறித்து சூரிச் கன்டோனல் பொலிசார் விசாரித்து வருகின்றனர்.
மூலம்- 20min.