நிதி நெருக்கடி காரணமாக, 2026 ஆம் ஆண்டுக்குள் சுவிஸ் போஸ்ட் சுமார் 100 பணியாளர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டின் முதல் பாதியில், நிறுவனத்தின் இலாபம் முந்தைய ஆண்டை விட 44% குறைந்துள்ளது.
தபால் சேவையை வரி செலுத்துவோரின் பணம் இல்லாமல் தொடர்ந்து வழங்குவதே இதன் நோக்கம் என்று சுவிஸ் போஸ்ட் தெரிவித்துள்ளது.
இந்த காரணமாக, 2026 ஆம் ஆண்டு சுவிஸ் போஸ்ட் வலைமைப்பில் மறுசீரமைப்பு தேவைப்படுகிறது, இந்த மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக அதிகபட்சமாக 100 பணியாளர்களை பணிநீக்கம் செய்யப்படுவது சாத்தியமாகும்.
சுவிஸ் போஸ்டின் செயல்பாட்டு முடிவு முந்தைய ஆண்டை விட 29% குறைந்து இப்போது 118 மில்லியன் பிராங்காக உள்ளது. லாபம் 44% குறைந்து 74 மில்லியன் பிராங்காக உள்ளது.
மூலம்- swissinfo