பயிற்சியாளர்களுக்கு எட்டு வார வருடாந்த விடுமுறை கோரி, தொழிற்சங்கங்களின் ஆதரவுடன் கூடிய சுவிஸ் கூட்டணி, அரசாங்கத்திடம் ஒரு மனுவை வழங்கியுள்ளது.
பயிற்சியாளர்களின் பணிச்சுமையைக் குறைப்பது, இடைநிற்றலைத் தடுப்பது மற்றும் தொழிற்கல்வியை மிகவும் கவர்ச்சிகரமானதாக மாற்றுவதே இதன் நோக்கமாகும்.
இது தொடர்பாக, இரண்டு மாதங்களில் 176,447 கையொப்பங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.
மாணவர்கள் வருடத்திற்கு 13 வார விடுமுறையைப் பெற்றாலும், பயிற்சியாளர்களுக்கு ஐந்து வாரங்கள் மட்டுமே விடுமுறை கிடைப்பதை அரசாங்கத்திற்கு எழுதப்பட்டுள்ள இந்த திறந்த கடிதம், சுட்டிக்காட்டுகிறது.
மூலம்- swissinfo