குற்றம் இடம்பெற்ற இடங்களில் பெறுமதியான பொருட்களைத் திருடிய பெண் பொலிசுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
2018 ஆம் ஆண்டுக்கும் 2021 ஆம் ஆண்டுக்கும் இடையில் பணியில் இருந்தபோது செய்த பல குற்றங்களுக்காக, வாட், நியோனில் உள்ள நீதிமன்றத்தில் புதன்கிழமை அந்தப் பெண் பொலிஸ் முன்னிலையானார்.
குற்றம் சாட்டப்பட்டவர் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார், ஆனால் அவற்றின் அளவை ஓரளவு மறுக்கிறார்.
30 வயதான அவர், கொள்ளை சம்பவங்கள் இடம்பெற்ற இடத்தில் இருந்து நகைகள் மற்றும் கைக்கடிகாரங்களைத் திருடியதாகவும், காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட தொலைந்த பொருட்களைஎடுத்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
அவர் குடும்ப உறுப்பினர்களுடன் பொலிஸ் அறிக்கைகள் உட்பட – இரகசியத் தகவல்களை – வாட்ஸ்அப் மூலம் பகிர்ந்து கொண்டார் என்றும் குற்றம்சாட்டப்பட்டுள்ளார்.
சட்டவிரோதமாக அபராதம் விதித்தார் என்ற குற்றச்சாட்டும் அவர் மீது கூறப்பட்டுள்ளது.
குற்றப்பத்திரிகையின்படி, அவர் மசாஜ்கள், நகங்களை அழகுபடுத்துதல் மற்றும் ஒரு சிகையலங்கார நிபுணருக்கு செலவிட்டார்.
அவரது திருட்டினால் ஏற்பட்ட நிதி இழப்பு 11,000 முதல் 17,000 வரையான சுவிஸ் பிராங்குகளாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
6,200 சுவிஸ் பிராங்குகள் மாத சம்பளம் பெற்ற அந்தப் பெண், தனக்கு உண்மையில் “பணம் தேவையில்லை” என்று ஒப்புக்கொள்கிறார்.
“அவை தூண்டுதல்கள் என்றும், அது தவறு என்று எனக்குத் தெரியும், ஆனால் என்னால் என்னைக் கட்டுப்படுத்த முடியவில்லை,” என்றும் நீதிமன்றத்தில் கூறியுள்ளார்.
எனினும், இளம் பெண் பொலிசி்ன் நடவடிக்கைகள் “மிகவும் தீவிரமானவை” என வகைப்படுத்தப்பட்டுள்ளன.
அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை எதிர்பார்க்கப்படுகிறது, அதில் ஒரு வருடம் கட்டாயமாகும்.
காவல்துறை அல்லது நீதித்துறை தொடர்பான எந்தவொரு பணியும் உட்பட, ஐந்து ஆண்டுகளுக்கு அவர் தனது தொழிலைச் செய்ய தடை விதிக்கப்படும்.
செவ்வாய்க்கிழமை தீர்ப்பு எதிர்பார்க்கப்படுகிறது.
மூலம்- 20min.