26.3 C
New York
Monday, August 31, 2026

ரஷ்யாவுக்கு எதிரான தடைகளை மீறிய நிறுவனம் மீது விசாரணை.

பார் நகரைச் சேர்ந்த ஓபன் மினரல் நிறுவனம் மீது பொருளாதார விவகாரங்களுக்கான அரச செயலகம் (சீகோ) விசாரணையைத் தொடங்கியுள்ளது.

தங்கம் தொடர்பாக ரஷ்யாவிற்கு எதிரான தடைகளை இந்த நிறுவனம் மீறியதாக சந்தேகிக்கப்படுவதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

- Advertisement -

உக்ரைன் மீதான இராணுவ படையெடுப்பு தொடங்கிய பின்னர் மொஸ்கோவிற்கு எதிரான தடைகளை மீறி, ஓபன் மினரல் ரஷ்யாவிலிருந்து விலைமதிப்பற்ற உலோகத்தை வர்த்தகம் செய்ததாகக் கூறப்படுகிறது.

அந்த நிறுவனம், அது விசாரணையில் உள்ளதை உறுதிப்படுத்தியது.

“2022 இல் நடந்த வணிக நடவடிக்கைகள் குறித்த விசாரணையின் ஒரு பகுதியாக கடந்த வாரம் அதிகாரிகள் எங்கள் வளாகத்தை சோதனை செய்தனர்.

நிறுவனம் அதிகாரிகளுடன் ஒத்துழைத்ததாகவும், தொடர்ந்து அதைச் செய்யும் என்றும், வணிக நடவடிக்கைகள் வழக்கம் போல் தொடர்கின்றன என்றும் அது அறிவித்தது.

செப்டம்பர் 11 ஆம் திகதி ஜக் மாகாணத்தில் ஒரு வீடு சோதனையிடப்பட்டதாக சீகோ உறுதிப்படுத்தியது.

“தற்போது இரண்டு பேருக்கு எதிராகவும், தெரியாத நபர்களுக்கு எதிராகவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன” என்று ஒரு பேச்சாளர்  குறிப்பிட்டார்.

மூலம்- swissinfo

Related Articles

Latest Articles