Dietikon அருகே Limmat இல் படகு ஒன்றில் சவாரி செய்த இருவர், ஆபத்தில் சிக்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு 7.30 மணியளவில் விடுக்கப்பட்ட ஆபத்துக் கோரிக்கையை அடுத்து, பொலிசார் மற்றும் ஏனைய அவசர சேவைகளும் களத்தில் இறக்கப்பட்டன.
- Advertisement -

அத்துடன் ஹெலிகொப்டர் ஒன்றும் தேடுதலில் ஈடுபடுத்தப்பட்டது.
நீரில் இருந்து முதலில் ஒருவரும் பின்னர் மற்றொருவருமாக இரண்டு பேரும் காப்பாற்றப்பட்டனர்.
எனினும் அவர்கள் தாழ் வெப்பநிலையால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சூரிச் கன்டோனல் பொலிஸ் தெரிவித்துள்ளது.
மூலம்- 20min


