பல நாட்களாக, ரஷ்ய ட்ரோன்கள் டென்மார்க்கில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், ரஷ்ய தரையிறங்கும் கப்பல் ஒன்று பல நாட்களாக டென்மார்க் கடற்கரைக்கு அருகே தரித்து நிற்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அலெக்சாண்டர் ஷபாலின் என்ற இந்தக் கப்பல் லாங்கேலாண்ட் மற்றும் லோலண்ட் தீவுகளின் தெற்கு முனைக்கு இடையில், லாங்கேலாண்டிலிருந்து சுமார் 12 கிலோமீட்டர் தொலைவில் காணப்பட்டுள்ளது.
ட்ரோன்களின் அச்சுறுத்தலுக்குள்ளாகிய விமான நிலையங்கள் மற்றும் இராணுவ நிலைகளுக்கும் இந்தக் கப்பலுக்கும் இடையிலான தூரம் 70 முதல் 270 கிலோமீட்டர் வரை உள்ளது.
வியாழக்கிழமை ஒரு செய்தியாளர் சந்திப்பில், ரஷ்ய போர்க்கப்பல் இருப்பது பற்றி கேட்டபோது, தேசிய காவல்துறைத் தலைவர் தோர்கில்ட் ஃபோக்டே, நடந்து கொண்டிருக்கும் விசாரணைகள் குறித்து கருத்து தெரிவிக்கமாட்டோம் என்று கூறினார்.
மூலம்- 20min.

