சுவிட்சர்லாந்தில் இந்த ஆண்டு அதிகளவான நிறுவனங்கள் வங்குரோத்தை அடைந்துள்ளன.
குறிப்பாக கட்டுமானம், கட்டரிங் மற்றும் சில்லறை விற்பனைத் துறைகள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் நிறுவன வங்குரோத்துகள் 19.5% அதிகரித்துள்ளதாக ருளாதார தகவல் சேவையான CRIF தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் 8,387 நிறுவனங்கள் வங்குரோத்து நிலையை அடைந்துள்ளன.
பெரும்பாலான வங்குரோத்து நிலை கட்டுமானத் துறையில் (1,192) ஏற்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து கட்டரிங் துறையில் (872) மற்றும் சில்லறை விற்பனை துறையில் (606) ஆகியன வங்குரோத்து சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
மூலம்- swissinfo

