யாழ்ப்பாணத்தில் தற்போது பெய்து வரும் மழையுடன் மீன்களும் விழுந்துள்ளன.
நேற்று அதிகாலை முதல் மதியம் வரை மழை விடாமல் கொட்டியது. இதன் போது யாழ். நகரப் பகுதியில் சில இடங்களில் மழையுடன் மீன்களும் விழுந்துள்ளன.
அந்த மீன்களை சிலர் வாளிகளில் சேகரித்துச் சென்றுள்ளனர்.

