மேற்கு சுவிட்சர்லாந்தில் மணிக்கு 132 கிமீ வேகத்தில் வீசிய- பென்ஜமின் சூறாவளி பலத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்தப் புயல் போக்குவரத்து சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது.
மரங்கள் விழுந்ததால் சியோன் பள்ளத்தாக்கை தற்காலிகமாக மூட வேண்டியிருந்தது என்று நியூசாடெல் கன்டோனல் பொலிசார் அறிவித்தனர்.
லா சௌக்ஸ்-டி-பொண்ட்ஸ் மற்றும் பெசன்சோன் இடையேயும், வேவி மற்றும் ஐகிள் இடையேயும் ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
பீல் மற்றும் மௌட்டியருக்கும், பாசல் மற்றும் லாஃபெனுக்கும் இடையில் சில நேரங்களில் தாமதங்களுடன், ரயில்கள் பயணித்தன,
ஜெனீவாவில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நகர நிர்வாகம் அனைத்து பூங்காக்கள் மற்றும் நடைபாதைகளையும் மூடியது.
வடக்கு ஆல்ப்ஸ் பகுதி முழுவதும் மத்திய அரசு 5 இல் 3 ஆம் நிலை எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
இது மரங்கள் விழுவதற்கு அல்லது தனிப்பட்ட கூரைகளுக்கு சேதம் ஏற்பட வழிவகுக்கும்.கடுமையான தொடர்ச்சியான மழை வெள்ள அபாயத்திற்கும் வழிவகுக்கும் என எச்சரிக்கப்பட்டிருந்தது.
மூலம்- swissinfo

