வைசென்காஸ் வழியாக H13 நோக்கி 64 வயது நபர் ஒருவர் ஓட்டிச் சென்ற கார், 19 வயது இராணுவ சிப்பாய் ஓட்டிச் சென்ற ஒரு இராணுவ வாகனத்தின் மீது மோதி விபத்திற்குள்ளானது.
இந்த விபத்தில் காரின் ஓட்டுநர் காயமடைந்து அம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இராணுவ வாகனத்தில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர், ஆனால் காயமடையவில்லை. இரண்டு வாகனங்களும் சேதமடைந்தன. H13 நெடுஞ்சாலை சுமார் ஒன்றரை மணி நேரம் பகுதியளவு மூடப்பட்டிருந்தது.
மூலம்- bluewin

